அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: ஏழு பேர் பலி

United States of America Accident Flight
By Fathima Jan 27, 2026 05:55 AM GMT
Fathima

Fathima

அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கி விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவு மற்றும் பனிப் புயல் காரணமாக பல்வேறு மாகாணங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஷேக் ஹசீனாவின் உரை! இந்தியாவின் செயலால் அதிர்ச்சியடைந்த பங்களாதேஷ்

ஷேக் ஹசீனாவின் உரை! இந்தியாவின் செயலால் அதிர்ச்சியடைந்த பங்களாதேஷ்

மீட்புப் படை

இந்த நிலையில், மெய்ன் மாகாணத்தில் உள்ள பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி நேற்று (26-01-2026) இரவு 7.45 மணியளவில் தனியார் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட எட்டு பேர் பயணித்த நிலையில், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட 45 வினாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து தரையில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது.

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: ஏழு பேர் பலி | Plane Caught In Snowstorm In America 7 Death

உடனடியாக விமான நிலையத்தில் மீட்புப் படையினர் தீயை அணைத்த நிலையில், ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்தபோது கடுமையான பனிப்புயல் வீசிக் கொண்டிருந்ததாகவும், மோசமான வானிலையே விபத்துக்கான காரணம் என்றும் அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் முதல்கட்டத் தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! வளைகுடா பகுதியை நோக்கி நகரும் அமெரிக்க விமானம்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! வளைகுடா பகுதியை நோக்கி நகரும் அமெரிக்க விமானம்

சுற்றுலா சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் - அதிர்ச்சியில் கர்ப்பிணி மனைவி

சுற்றுலா சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் - அதிர்ச்சியில் கர்ப்பிணி மனைவி