சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல்

Gotabaya Rajapaksa Pillayan Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan Channel 4
By Rakshana MA Nov 23, 2024 07:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான்(Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.

நேற்று (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கொடுக்கப்பட்ட 7 மணிநேர வாக்குமூலமத்திலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் அருட்தந்தையொருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே சிஐடியில் (CID) முன்னிலையாகுமாறு எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

ஆட்சியில் அமர்த்துவதற்கான திட்டம்

மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை(Gotabaya Rajapaksa) ஆட்சியில் அமர்த்துவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அஸாத் மௌலானா(Asad Maulana) குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உண்மையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அராசங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவே (SLPP) வெற்றி பெற்றது.

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல் | Pillaiyan S 7 Hour Testimony At Cid

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 2019ஆம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தை 2018ஆம் ஆண்டே மக்கள் புறக்கணித்து விட்டனர்.

அந்த வகையில் 2018இல் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக யாரை நியமித்திருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார். மக்களின் மனநிலை அவ்வாறு தான் காணப்பட்டது.

குறிஞ்சாங்கேணி படகுப்பாதையில் மரணித்தவர்களுக்கான துஆ பிரார்த்தனை

குறிஞ்சாங்கேணி படகுப்பாதையில் மரணித்தவர்களுக்கான துஆ பிரார்த்தனை

குற்றப்புலனாய்வுப்பிரிவினர்

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இதனை  தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது.

எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே, யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்கள் செயற்படக் கூடாது.

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல் | Pillaiyan S 7 Hour Testimony At Cid

அத்துடன் எனக்கு எந்த பயமும் இல்லை. பழிவாங்கல் நோக்கத்துடனேயே என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றவர்களிடம் கேட்க வேண்டிய விடயங்களை என்னிடம் கேட்கக் கூடாது. அவ்வாறில்லை என்றால் இது தொடர்பில் ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்.

மேலும் புலனாய்வுப்பிரிவினர் ஜனாதிபதியின் கண்களைப் போன்று இருக்க வேண்டும். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தால் எம்மால் எதுவும் செய்ய முடியாது.

இதற்கிடையில் சிறைச்சாலையிலிருந்து கொண்டு இவ்வாறானதொரு சதித்திட்டத்தை திட்டமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை“ என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் தீ பற்றி எரிந்த சொகுசு கார்

பத்தரமுல்லையில் தீ பற்றி எரிந்த சொகுசு கார்

பத்தரமுல்லையில் தீ பற்றி எரிந்த சொகுசு கார்

பத்தரமுல்லையில் தீ பற்றி எரிந்த சொகுசு கார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW