ரிஷாட்க்கு எதிரான மனு; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(15.10.2025) தள்ளுபடி செய்யப்பட்டது.
நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், ஏழு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பலமுறை நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டபோதிலும், வழக்குத் தாக்கல் செய்தவர்கள் நடைமுறைப்படி வழக்கை முன்னெடுக்கத் தவறியதால், தீர்ப்பின்றி இவ்வழக்கு நீடித்தது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு இதோ....