வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்
Ali Sabry
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Department of Motor Vehicles
By Laksi
இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் தனது எகஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி
அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |