உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரம் நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 13, 2024 08:10 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.

அத்துடன் உத்தியோகபற்றற்ற முடிவுகளை வெளியிடுவதிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் கூறுகையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களது பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும்.

தெளிவற்ற விபரங்கள் வெளியாகும் சாத்தியம்

அவர்கள் வாக்கு எண்ணும் பணிகளை அவதானித்து, அதிகாரிகள் கூறுகின்ற எண்ணிக்கைகளை அதன் பின்னர் ஏற்படுகின்ற சீர்திருத்தங்களை கணக்கில் கொள்ளாமல் தெளிவற்ற விபரங்களை வெளியிடக்கூடும்.

உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரம் நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை | Election Commission Special Request To The Public

இவ்வாறான தெளிவற்ற உத்தியோகபற்றற்ற விபரங்கள், உத்தியோகபூர்வ பெறுபேறுகளிலிருந்து வித்தியாசமாக இருக்கவும் கூடும்.

எனவே பொதுமக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இறுதியாக உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படுகின்ற முடிவுகளை மாத்திரமே நம்ப வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW