தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறுகோரி கவனயீர்ப்பு போராட்டம்

Trincomalee SL Protest Eastern Province
By Laksi Jan 08, 2025 07:47 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை (Trincomalee) – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது வெருகல் பிரதேச செயலகம் முன் இன்று (08) இடம்பெற்றுள்ளது.

“1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போலி குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

போலி குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மனு கையளிப்பு

குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? ஏதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில்  இதனை தடை செய்யுமாறு கோரி குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறுகோரி கவனயீர்ப்பு போராட்டம் | People Protest Trinco Verugal Area Banner Issue

அநுர ஆட்சியிலும் அபகரிப்பா, தொல்லியல் காணியில் விகாரை கட்டப்படாத இடம் உண்டா, அடுத்து புத்தர் சிலையா பௌத்த விகாரையா? போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸிடம் மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

தமிழர் பகுதியில் காணி ஒன்றிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு

தமிழர் பகுதியில் காணி ஒன்றிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW