இலங்கையில் PayPal சேவைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Technology
By Vinoja May 08, 2026 01:37 PM GMT

உலகின் முன்னணி இணையவழிப் பணப்பரிவர்த்தனை சேவையாக திகழும் PayPal சேவைகளை இலங்கையில், அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

இது குறித்த தொழில்நுட்பக் கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் PayPal சேவைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை | Paypal Direct Money Transfer Introduces Sri Lanka

அதன்படி, எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் இந்த சேவையை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சேவையானது இலங்கையின் டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பல புதிய வாய்ப்புகளைத் உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, உலகச் சந்தையில் தமது சேவைகளை வழங்கும் திறமையான இளம் தலைமுறையினர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் (Freelancers), தமக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நிலவும் தடைகள் இதன் மூலம் நீக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்டுகின்றது.