ரணிலுக்கே எனது ஆதரவு: அமைச்சர் பவித்ரா அறிவிப்பு
Mrs Pavithradevi Wanniarachchi
Ranil Wickremesinghe
Sri Lanka Presidential Election 2024
By Laksi
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, ஆளும் தரப்பில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |