மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Sri Lankan political crisis
By Fathima Jun 12, 2023 07:47 PM GMT
Fathima

Fathima

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த நீதிப் பேராணை மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஷமிந்த விக்ரம, இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதன்படி, இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.