இலங்கையில் கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Passport
By Mayuri Jun 26, 2024 01:50 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு பின் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளுக்கு ஓராண்டிற்கு செல்லுபடியாகும் வகையில் கால நீடிப்பு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையானது இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடைமுறை செல்லுபடியாகும் காலம்

இந்த கால நீடிப்பானது, ஏற்கனவே 10 ஆண்டு கால செல்லுபடியாகும் காலத்தை தாண்டிய கடவுச்சீட்டுகளுக்கு பொருந்தும்.

இலங்கையில் கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு | Passports In Sri Lanka

2024 நவம்பரில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வெளியீடு தொடங்கும் வரை இது நடைமுறையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW