யாழில் கடவுச்சீட்டு அலுவலகம்!

Tamils Jaffna Passport
By Dharu Feb 09, 2025 12:59 AM GMT
Dharu

Dharu

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

“யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

புதிய அலுவலகம்

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம்! | Passport Office To Open Soon In Jaffna

நாங்கள் இரண்டு மாதங்கள் மற்றும் 10 நாட்களில் கடவுச்சீட்டு பிரச்சினை பற்றிப் பேசினோம். அமைச்சரவையுலும் பேசினோம், நிறுவன பிரதானிகளை அழைத்துப் பேசினோம்.

கூடுதலாக, நீதித்துறை செயல்முறைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் தற்போதைய கடவுச்சீட்டு சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் பேசினோம்” என்றார்.