நாடாளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lankan Peoples
By Fathima Dec 13, 2025 08:30 AM GMT
Fathima

Fathima

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றம் அமர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு

இதன்படி, 18 ஆம் திகதி, காலை 9.30 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு | Parliament On The 18Th Speaker S Announcement

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.