பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க கூடாது: எச்சரித்த ட்ரம்ப்
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால், அமெரிக்காவின் அனைத்து வகையான ஆதரவுகளும் உடனடியாக திரும்பப் பெறப்படும் என ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இன்று நேற்று அல்ல, கடந்த 1967ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
மேற்கு கரை ஆக்கிரமிப்பு
இதில், மேற்கு கரையின் ஆக்கிரமிப்பு தொடர்பாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக போர் நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான போரும் நடந்தது.

தற்போது அமெரிக்காவின் தலையீட்டால் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இதையடுத்து ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |