38 டிரில்லியன் டொலரை தாண்டிய கடன் : அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பரிதாபம்
அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் அரசாங்க செலவினங்களுக்கும் வருவாய்களுக்கும் இடையிலான இடைவெளி வேகமாக விரிவடைந்து வருவதால், அமெரிக்காவின் தேசியக் கடன் 38 அமெரிக்க டொலரை டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடன் தொகையின்படி, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1லட்சத்து 11ஆயிரம் அமெரிக்க டொலர் கடனுள்ளது.
அத்துடன், உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் அந்நாட்டின் தேசியக் கடனும் வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |