ஸ்காட்லாந்து பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியினர் தேர்வு

Pakistan
By Fathima Mar 28, 2023 06:27 PM GMT
Fathima

Fathima

ஸ்காட்லாந்து புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து பிரதமராகவிருந்த நிக்கோலா ஸ்டர்ஜன் கடந்த மாதம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்காட்லாந்து பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியினர் தேர்வு | Pakistani Origin Prime Minister Of Scotland

இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் கூட்டம் இடம்பெற்ற நிலையில் நிக்கோலா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 37 வயதான ஹம்சா யூசுப்பிற்கும், நிதியமைச்சராக இருக்கும் கேட் போர்ப்சுக்கும் இடையே போட்டி நடந்துள்ளது.

இதில் ஹம்சா யூசுப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் விரைவில் அவர் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.