இலங்கையர்களை நெகிழ வைத்த பாகிஸ்தான் இரசிகர்களின் செயல்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி சுற்றின் போது பாகிஸ்தான் இரசிகர்கள் செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
நெகிழ்ச்சி செயல்
குறித்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இருப்பினும், போட்டியின் போது பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதான அரங்கில் காட்சியளித்தனர்.
பாகிஸ்தானில் நிலவும் பதற்ற சூழலிலும் இலங்கை அணி வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டமையை வரவேற்கும் வகையில் அவர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதானத்தில் தோன்றியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாகிஸ்தான் இரசிகர்களின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


