நீதிமன்றம் மூலமாக தன்னை ஒடுக்க பாகிஸ்தான் இராணுவம் சதி - இம்ரான்கான் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில்,நீதிமன்றம் மூலமாக தன்னை ஒடுக்க பாகிஸ்தான் இராணுவம் சதி செய்து வருவதாக இம்ரான்கான் குற்றம்ச்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் தன் மீதான 10 வழக்குகளில் விசாரணைக்காக இஸ்லாமாபாத நீதிமன்றத்திற்கு இம்ரான்கான் நேற்று முன்தினம் முன்னிலையானதையடுத்து பாகிஸ்தான் இராணுவம் சதி செய்து வருவதாக இம்ரான்கான் குற்றம்ச்சாட்டியுள்ளார்.
அதை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், "எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆதாரமற்றவை என்பதை அவர்கள் அறிவார்கள்.
மேலும் இந்த போலி வழக்குகளில் எனக்கு தண்டனைக்கு வாய்ப்பு இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். எனவே எனது விசாரணையை ராணுவ கோர்ட்டில் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.