சுற்றுலா பயணிகளுக்கு இணைய வழி விசா முறைமை குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lanka Police Parliament of Sri Lanka Sri Lanka
By Shalini Balachandran Jul 14, 2024 09:37 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவினால் இணைய முறைமை மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நிதிக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.

ஷெஹான் சேமசிங்க, மகிந்தானந்த அளுத்கமகே, வஜிர அபேவர்தன, சுரேன் ராகவன், துமிந்த திஸாநாயக்க, பிரேம்நாத் டொலவத்த, சீதா அரம்பேபொல, அனுப பசகுவல், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மதுர விதானகே மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுடன் தாம் உடன்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணி

அத்தோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான புள்ளி விபரங்கள் முரண்பாடானதாக இருப்பதால் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு இணைய வழி விசா முறைமை குறித்து வெளியான அறிவிப்பு | Opposition To Sri Lanka Online Visa System

மேலும், நிதிக்குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வாவிடம் எடுத்துரைத்துள்ளதாக மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW