மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா

Sri Lanka Kalmunai
By Rukshy Jul 01, 2024 10:44 AM GMT
Rukshy

Rukshy

கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய "கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா" பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (01) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.சி. பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட புதிய அதிபர் காரியாலயம் மற்றும் பாதை என்பவற்றை திறந்து வைத்தார்.

கல்வியில் சாதித்த மாணவர்கள்

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீம் அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி, வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.பௌசர் மற்றும் காரைதீவு கல்விக்கோட்ட அதிபர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா | Opening Ceremony Sabina Muslim High School

இதன்போது திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.சி. பைசால் காசிமின் கல்விச் சேவையை பாராட்டி பாடசாலை சமூகம் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் கல்வியில் சாதித்த மாணவர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery