தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி: 19 பேர் காயம்

Gampaha Sri Lanka Negombo Fire
By Laksi Oct 14, 2024 10:40 AM GMT
Laksi

Laksi

திவுலப்பிட்டிய - படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கார்பன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

இந்த தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேலதிக விசாரணை

சம்பவத்தில் கிரியுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி: 19 பேர் காயம் | One Person Died And 19 Injured Explosion Factory

அத்தோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் அகரகம மற்றும் திவுலபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

20 வேட்பாளர்களினால் தேர்தல் செலவு விபரங்கள் சமர்ப்பிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு

20 வேட்பாளர்களினால் தேர்தல் செலவு விபரங்கள் சமர்ப்பிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW