நிந்தவூரில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை (Ampara)-நிந்தவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புற நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) மல்வத்தை விசேட அதிரடிப் படையினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அவுலியா வீதி நிந்தவூர் 23 பிரிவினை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விநியோகம்
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2 மில்லி 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர் இந்தப் பகுதியில் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளதுடன் அவர் போதைக்கு அடிமையாகி உள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |