காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

Batticaloa
By Mayuri Aug 20, 2024 11:48 AM GMT

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான், புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகை ராசா (வயது 60) மூன்று பிள்ளைகளின் என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று (19) அதிகாலை துவிச்சக்கர வண்டிலில் சென்ற வேளையில் பனை மரத்தின் கீழ் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியபோதே அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி | One Killed In Wild Elephant Attack

பிரேத பரிசோதனை

கோரளைப்பற்று, தெற்கு கிரான் பகுதிக்குரி திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (20) சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW