கந்தளாயில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலி
Trincomalee
Sri Lanka
By Nafeel
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராக்கிற மாவத்தை பகுதியில் ஆசிரியர் ஒருவர் புகையிரத கடவையை தாண்டும் போது எதிரே வந்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார் .
இவ்விபத்துச் சம்பவம் இன்று(25)இடம்பெற்றுள்ளது. அமில பிரசாத் கருணாரத்ன 34 வயதுடைய ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்ட போதே புகையிரதம் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் உதவியுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.