கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

Bandaranaike International Airport Dubai Sri Lanka Police Investigation Crime
By Laksi Dec 06, 2024 07:41 AM GMT
Laksi

Laksi

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேலதிக விசாரணை

சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது | One Arrested At Katunayake Airport

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 5,780 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 28 சிகரட்டு காட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

சம்மாந்துறையில் இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறையில் இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW