ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Kalmunai Weather Floods In Sri Lanka
By Rakshana MA Nov 27, 2024 06:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணத்தினால் அக்கரைப்பற்று - கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று(27) அதிகாலை இடிந்து வீழ்ந்ததால் அதன் ஊடான போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை!

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை!

போக்குவரத்திற்கு தடையான வெள்ளம்

வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளமையால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் அப்பகுதியினால்பிரயாணம் மேற்கொள்ளும் மக்களை விழிப்பூட்டி வருவதுடன், குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர்.

ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு | Oluvil Bridge Collapse Akp To Kalmunai Traffic

இந்த பாலம் உடைப்பெடுத்துள்ள காரணத்தினால் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியுடனான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பிரயாணிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் வெள்ளப்பெருக்கு: களத்தில் இம்ரான் எம் . பி

திருகோணமலையில் வெள்ளப்பெருக்கு: களத்தில் இம்ரான் எம் . பி

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGallery