கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசலின் பெயர் மாற்றத்திற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்

Kalmunai
By Farook Sihan Sep 13, 2026 03:16 PM GMT

‘R/725/AM/19’ எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல், இனிமுதல் உத்தியோகபூர்வமாக ‘கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால முயற்சியின் பலனாக, இலங்கை வக்பு சபையின் WB/BP/46/2026 – 12.08.2026 எனும் தீர்மானத்தின் அடிப்படையில், குறித்த உத்தியோகபூர்வ பெயர் மாற்றத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளை ஏற்று, பெயர் மாற்றத்திற்கு அனுமதி வழங்கிய இலங்கை வக்பு சபைக்கும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும், கல்முனை வாழ் பொதுமக்கள் சார்பில் நம்பிக்கையாளர் சபையினர் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.


Gallery