இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வு

Sri Lankan Peoples Eastern Province Kalmunai School Incident
By Rakshana MA Jan 30, 2025 12:15 PM GMT
Rakshana MA

Rakshana MA

நவீன உலகத் தேவைகளுக்கு ஏற்றவாறு நாமும் மாறிச் செல்வோம் என்பதற்கு இணங்க கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் அண்மையில் பொருத்தப்பட்டன.

அதன் உத்தியோகபூர்வ கையேற்பு நிகழ்வு நேற்று(29) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கமைவாகவும், பாடசாலை அபிவிருத்திச் செயற்குழுவின் செயலாளரின் தொடர் முயற்சியின் பயனாலும் தனியார் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் ஏ.எம். அப்துல் ரஹ்மானின் நிதி உதவியின் மூலம் இந்த கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பொது மக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகள்! போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பொது மக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகள்! போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

உத்தியோகபூர்வ நிகழ்வு

அத்துடன், இந்த நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஜாபிர், விசேட அதிதியாக தனியார் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.எம்.றியாலும் கலந்து கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை உத்தியோகபூர்வமாக கை அளித்ததுடன் அதற்கான நினைவுக் கல்வெட்டையும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வு | Official Event At Islamabad Muslim Maha Vidyalaya

இதன் போது, 2024ஆம் கல்வி ஆண்டின் இறுதித் தவணை பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி முன்னேற்ற அறிக்கையும் அதற்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும், மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் முன்வைக்கப்பட்டதுடன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஜாபிர், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்று குழு உறுப்பினர் ஏ.அபூபக்கருக்கும், அதிபரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், SDEC உறுப்பினர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இரத்த புற்றுநோய் தொடர்பான 9 விசேட வைத்திய நிபுணர்களை இழந்துள்ள இலங்கை! வெளியா தகவல்கள்

இரத்த புற்றுநோய் தொடர்பான 9 விசேட வைத்திய நிபுணர்களை இழந்துள்ள இலங்கை! வெளியா தகவல்கள்

மட்டக்களப்பில் பேருந்தில் தனித்திருந்த 15 வயது சிறுமி! பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை

மட்டக்களப்பில் பேருந்தில் தனித்திருந்த 15 வயது சிறுமி! பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery