வருடாந்த ஹஜ் யாத்திரை! 5 வருட வரலாற்றில் அதிக விண்ணப்பங்களை பதிவு செய்த ஒடிசா
Festival
Saudi Arabia
Odisha
By Thahir
வருடாந்த ஹஜ் யாத்திரைக்கான இணையவழி விண்ணப்பத்திகதி திங்கட்கிழமையுடன் முடிவடைந்த பின்னர் ஒடிசாவை சேர்ந்த சுமார் 938 முஸ்லிம்கள் இந்த ஆண்டு ஹஜ் செல்ல ஆர்வம் காட்டியுள்ளதாக அதிகார பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை கடந்த வியாழக்கிழமை அன்று வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் மாநில ஹஜ் கமிட்டியின் செயலதிகாரி சுல்தான் கான் கூறுகையில், கடந்த 5 வருட காலத்தில் ஹஜ் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் இதுவே சாதனையாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒடிசாவிலிருந்து ஹஜ் செல்லும் யாத்திரீகர்களின் இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.