நாட்டில் அதிகரிக்கும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை

Cancer Sri Lanka Government Of Sri Lanka
By Rakshana MA Jul 24, 2025 03:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனியார் துறையினருக்கான மாத சம்பளம்: வெளியான தகவல்

தனியார் துறையினருக்கான மாத சம்பளம்: வெளியான தகவல்

 புற்று நோயாளிகள்

நாளாந்தம் சுமார் 10 புதிய நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர் எனவும் இதில் 15% ஆண்கள் மற்றும் 3% பெண்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை | Number Of Cancer Patients In Sri Lanka

இந்த நிலையை எதிர்கொள்வதற்காக, சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

மேலும், மக்கள் பல் பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு, ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது.   

மட்டக்களப்பில் குரங்கு கடிக்கு இலக்காகிய 6 பெண்கள் படுகாயம்!

மட்டக்களப்பில் குரங்கு கடிக்கு இலக்காகிய 6 பெண்கள் படுகாயம்!

அம்பாறையில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்...

அம்பாறையில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்...

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW