ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

Ministry of Education Sri Lanka Government Of Sri Lanka Education
By Laksi Jan 07, 2025 05:49 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, ஆசிரியர்களால் இடமாற்றம் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

சம்பள முரண்பாடுகள்

இதனால் புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை பல ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் | Notification Regarding Teacher Vacancy

அரச சேவையில் நிலவும் பாரிய சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25,000 கொடுப்பனவை வழங்குமாறு ஐக்கிய கல்வி சேவை சங்கம் மற்றும் ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை, வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட சோதனை நடவடிக்கைகள் : குறைவடைந்துள்ள விபத்துக்கள்

விசேட சோதனை நடவடிக்கைகள் : குறைவடைந்துள்ள விபத்துக்கள்

விசேட சோதனை நடவடிக்கைகள் : குறைவடைந்துள்ள விபத்துக்கள்

விசேட சோதனை நடவடிக்கைகள் : குறைவடைந்துள்ள விபத்துக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW