தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு வெளியான அறிவிப்பு
தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த நியமனங்களை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காதது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற 2024 பொதுத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தல் பணி
எனவே, தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் நியமிக்கப்பட்ட நாளில் தமக்கு வழங்கப்பட்ட நியமிக்கப்பட்ட இடத்தில் கடமையாற்றுவது கட்டாயமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |