இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

Sri Lanka Income Tax Department Inland Revenue Department
By Independent Writer Jun 24, 2026 11:35 AM GMT

நாட்டில் சொத்து மற்றும் வாகன விற்பனை மீதான வரி விதிப்பு தொடர்பில் இறைவரித் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

தனிநபர் குடியிருப்பு சொத்து மற்றும் வாகன விற்பனை குறித்து திணைக்களம் அதன் அறிக்கையில் விளக்கியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 

 மூன்று ஆண்டுகள் சட்டபூர்வ உடைமை

“ஒருவர் தனது குடியிருப்பு சொத்தை விற்பனை செய்யும் போது, அந்த சொத்தை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தனது சட்டபூர்வ உடைமையில் வைத்திருந்திருக்க வேண்டும்.

இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு | Notice Those Who Are Planning Sell Their Vehicle

அத்துடன், அந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், அந்த விற்பனை தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துக்களை பரிமாற்றம் செய்வதற்கு எவ்வித வரியும் கிடையாது. மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யும் போது மட்டுமே வரி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஏப்ரல் 1, 2024 முதல் தனிநபர் வாகனங்களை விற்பனை செய்வதற்கான பழைய வரிமுறை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாகனத்தின் வயது, நிலை அல்லது மாதிரி எதுவாக இருந்தாலும், தனிநபர் வாகன விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு இலாபமும் வரிச் சுமையின்றி முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.