கொழும்பு புறநகர் பகுதியில் நீர்வெட்டு - நீர் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு

Colombo Sri Lankan Peoples Water Cut
By Fathima Jun 12, 2023 01:41 PM GMT
Fathima

Fathima

கொழும்பு புறநகரின் சில பிரதேசங்களில் நாளை 20 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாளைதினம் (13.05.2023) காலை 10 மணி முதல் நாளை மறுதினம் (14.05.2023) காலை 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்படும் இடங்கள்

கொழும்பு புறநகர் பகுதியில் நீர்வெட்டு - நீர் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு | Notice Of Water Drainage Board

எனபெலன்வத்தை - கனத்த வீதியில் உள்ள நீா் வெளியேற்றும் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரக்காபிட்டிய, சித்தமுல்ல, எரவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம - பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவெல வீதி, பொகுந்தர வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிளை வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.