சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Laksi Jan 03, 2025 02:30 PM GMT
Laksi

Laksi

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தற்போது நிலுவையிலுள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை விஜயத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இணையவழி முறையின் ஊடாக சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

பொலிஸார் கோரிக்கை

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு | Notice Issued To Waiting To Get Driving License

இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

திருகோணமலையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள்

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW