வடக்கு தொடருந்து சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Department of Railways
By Dilakshan Oct 26, 2024 01:01 PM GMT
Dilakshan

Dilakshan

எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் வடக்கு தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்றைய தினத்திலிருந்து வடகிற்கு இரண்டு தொடருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கசந்துறை வரையிலான யாழ்தேவி தொடருந்தும், பெலியஅத்தவிலிருந்து அநுராதபுரம் வரையிலான ரஜரட்ட ரஜின தொடருந்தும் திங்கட்கிழழை முதல் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் பயணிக்கவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நிர்மாணப் பணிகள் 

இந்த நிலையில், கடந்த நாட்களில் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

வடக்கு தொடருந்து சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு | Northern Train Services Resume Normal From Monday

அதன்போது, இந்திய கடன் திட்டத்தின் கீழ் மணித்தியாலத்துக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்கக்கூடிய வகையில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW