இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைப்பு

South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Apr 04, 2025 04:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்(Vice-Chancellor) பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் நேற்று 03 ஆம் திகதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்று நிருபத்தில் கோரப்பட்டுள்ள தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரர்களுக்கு ஏழு அளவுகோல்களின்(Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் முதலாவது பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி மூன்றாவதாக யூ.எல்.செயினுடின் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள்.

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற அம்பாறை இளைஞர் தெரிவு!

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற அம்பாறை இளைஞர் தெரிவு!

பல்கலைக்கழக உபவேந்தர்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது பதவிக்காலம் கடந்த 2024.08.09 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்திற்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம்.நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைப்பு | Nominations Open For Seusl Vc Post

அதன் அடிப்படையில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப்.ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம்.இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம்.முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம்.ஹனஸ் உள்ளிட்ட ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் இருந்து அப்போதைய பேரவை பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், றஸ்மி, ஹன்ஸியா றவூப் ஆகியோரை ஜனாதிபதிக்கு சிபார்சு செய்திருந்ததது.

இருந்தபோதும் அரசியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் நியமனங்கள் வழங்கப்படாது பதில் உபவேந்தராக கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது

ஆணைக்குழுவின் சுற்றுநிருபம்

பின்னர் மீண்டும் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த பெப்ரவரி 06 ஆம் திகதி விடுத்திருந்தார்.

அதற்கமைய மார்ச் 06ஆம் திகதி, 3.00 மணி வரை ஒன்பது பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில், கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி, பேராசிரியர் எம்.ஐ.எஸ்.சபீனா, பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன், பேராசிரியர் எப்.ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம்.முஸாதிக், பேராசிரியர் ஏ.ஜௌபர் மற்றும் கலாநிதி யூ.எல்.செயினுடீன் உள்ளிட்ட ஒன்பது பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைப்பு | Nominations Open For Seusl Vc Post

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறையும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை. தெரிவு செய்யப்பட்டுள்ள மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே மோதல்

திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே மோதல்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் ஆரம்பமாகும் கண்புரை அறுவை சிகிச்சை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் ஆரம்பமாகும் கண்புரை அறுவை சிகிச்சை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery