நாடாளுமன்றத்திற்குள் பொய்ப்பிரச்சாரங்கள் செய்யக்கூடாது : அலி சப்ரி தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தனது அதிகாரபூர்வ இல்லைத்தை வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்பதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே இதனை அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வழங்கிய அதிகாரபூர்வ இல்லத்தில் தாம் வசிக்கவில்லை எனவும் சொந்த இல்லத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பயன்படுத்திய இல்லத்தை ராஜதந்திரிகளை சந்திப்பதற்காக சில சமயங்களில் பயன்படுத்தியுள்ளதுமென குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை

இது தொடர்பில் தமது இல்லத்தை யாருக்கும் வழங்கியதில்லை எனவும் வழங்குவதற்கான அதிகாரமும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் மறைந்து கொண்டு பொய்ப்பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது