காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை..! ட்ரம்ப் திட்டவட்டம்
Donald Trump
World
Israel-Hamas War
Gaza
By Faarika Faizal
காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையில்லை. இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில் , 'காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையில்லை.
இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். திட்டம் நடைமுறைக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும். பணயக்கைதிகளை உடனடியாக மீட்போம்.
இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அநேகமாக இரண்டு நாட்கள் ஆகும்.
இது, முழு அரபு உலகத்திற்கும், இஸ்லாமிய உலகத்திற்கும் ஒரு பெரிய விடயம்' எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |