உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பணிகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உத்தியோகபூர்வ வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், ஏப்ரல் 20 ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக நாளாகக் கருதப்படும்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.