அது நான் இல்லை : மஹிந்த ராஜபக்ஷவுடன் வைரலாகும் புகைப்படத்தை மறுக்கும் நிலந்தி கொட்டஹச்சி
சமூக ஊடகங்களில் பரவி வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தோன்றும் புகைப்படத்தில் காணப்படும் நபர் நான் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி தோன்றுவதான ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி இதனை தெரிவித்துள்ளார்.
எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், "மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருமண விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை மற்றும் அந்த நிகழ்வுக்கு நான் அழைக்கப்படவில்லை." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த புகைப்படம் எந்த வகையிலும் திருத்தப்பட்டாலோ அல்லது கையாளப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்துள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |