அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன்! புதிய ஜனாதிபதி அநுர

Anura Kumara Dissanayaka President of Sri lanka Presidential Update
By Mayuri Sep 23, 2024 05:39 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார். 

இதன்போது அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், தேர்தலை நடத்துவதும், அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன். சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன்.

அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery