தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக அறிமுகமாகும் புதிய நடைமுறை
தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய தொடருந்து அணுகல் அட்டையை(Prepaid Card) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய தொழிநுட்பத்துடன் பற்றுச்சீட்டு
அட்டைகளை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் எனவும் தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதே சமயம், சம்பந்தப்பட்ட தொடருந்து முன்பணம் செலுத்திய பற்றுச்சீட்டுக்களை சரிபார்க்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |