புதிதாக அச்சிடப்பட்ட பணம் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கம்

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Oct 29, 2024 04:23 PM GMT
Laksi

Laksi

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

பணம் அச்சிடல் 

மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும்.

வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிதாக அச்சிடப்பட்ட பணம் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கம் | New Money Printed Central Bank Of Sl Report

இதனை பணம் அச்சிடல் என்று பதிவு செய்திட முடியாது. இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் முற்றிலும் இடம்பெறவில்லை.

இங்கு நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

ஏறாவூரில் பொலிஸாரின் கடமைக்கு தடையாக இருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

ஏறாவூரில் பொலிஸாரின் கடமைக்கு தடையாக இருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW