சம்மாந்துறையில் நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைப்பு
சம்மாந்துறை (Sammanthurai) நில அளவைத் திணைக்களத்திற்கான புதிய நிர்வாகக் கட்டடம் இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்சகர் ஏ.எஸ்.எம்.நஜாகத் தலைமையில் நடைபெற்றது.
நில அளவை திணைக்களம்
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவின் ஆலோசனை மற்றும் பிரதேச செயலாளர் ஹனீபாவின் முயற்சியால் இந்த புதிய கட்டடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டட திறப்பின் மூலம், சம்மாந்துறை, இறக்காமம், சென்றல்கேம்ப் உள்ளிட்ட பிரதேசங்களின் மக்களுக்கு நில சம்மந்தமான சேவைகள் விரைவாகவும் பயனுள்ள வகையிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா கலந்து கொண்டு புதிய கட்டடத்தினை திறந்து வைத்ததுடன், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண நில அளவையாளர் நாயகம் எம்.டி.எம்.ரபீக், சிறப்பு அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



