அரசாங்கத்தினால் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை: விஜித ஹேரத் பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka Government Of Sri Lanka
By Laksi Oct 29, 2024 08:37 AM GMT
Laksi

Laksi

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (29) கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொய்யான செய்தி

அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுவாக, புதிய திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வெளியிடும் முறையை மத்திய வங்கி கொண்டுள்ளது.

அரசாங்கத்தினால் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை: விஜித ஹேரத் பகிரங்கம் | New Government Did Not Print Money Vijitha Herath

அந்த செயல்முறை தினமும் நடக்கும் ஒன்று. மேலும், பணம் அச்சிடுவதை எடுத்துக் கொண்டால், உண்மையில் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை, அதைச் செய்ய முடியாது.புதிய பணத்தை அச்சிட முடியாது என்பது தெளிவாக உள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நாணயத்தாள் ஒன்றை பார்க்க எனக்கும் விருப்பம்தான்.ஆனால் இதுவரை அது வெளியிடப்படவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி." என்றார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

பொது இடங்களில் வைஃபை பயன்டுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் வைஃபை பயன்டுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW