இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Vijitha Herath Sri Lanka visa Visa-Free Entry
By Fathima Jan 06, 2026 01:08 PM GMT
Fathima

Fathima

இலங்கை ஏற்கனவே அறிவித்திருந்த விசா கட்டணமில்லா (Visa Free) திட்டத்தை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்தும் என வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும், விசா கட்டணமில்லா திட்டத்திற்கான வர்த்தமானி (Gazette) வெளியிடுவதில் அரசுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.

நடைமுறை

இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! | New Facility For Foreigners In Sri Lanka

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், சுற்றுலா துறையின் மீட்பை ஊக்குவிக்கும் நோக்கில் ETA விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் மேலும் 33 நாடுகளை சேர்க்க இலங்கை தீர்மானித்ததாக அறிவித்தது.

இந்த 33 நாடுகள், ஏற்கனவே விலக்கு பெற்றிருந்த சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.