இலங்கை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவோம்: வஜிர அபேவர்தன
இலங்கை வரலாற்றில் 2024 முடிவடையும் போது, ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறச்செய்யும் தனது கட்சியின் விருப்பத்தை கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.
உலகத் தலைவர்கள்
இதன்படி ரணில் விகரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வரலாற்றில் இடம் பெறுவார்.
எனினும், ஜோ பிடன், ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் போன்ற உலகத் தலைவர்களைக் கூட விக்ரமசிங்கவின் தலைமை விஞ்சி நிற்கிறது.
இதேவேளை விக்ரமசிங்கவிற்கு எதிராக "பைத்தியக்கார" ஆட்கள் மட்டுமே போட்டியிடுவார்கள் என்றும் அபேவர்தன கூறியுள்ளார்.