எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Local government Election
By Rakshana MA Mar 12, 2025 05:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையகம், சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவின் அறிவிப்பின்படி, உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் காலம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.

இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் நடைபெற்ற தேர்தல்

இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறை மூலம் நடைபெற்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரி

அதன்படி, மார்ச் 3 ஆம் திகதி, வேட்புமனு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான நியமனக் கடிதங்கள், மார்ச் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு | New Announcement For Local Government Election

சுயேட்சைக் குழுவின் தலைவர் வைப்புத்தொகை செலுத்தும் போது, ​​அந்தக் குழுவின் வேட்பாளர்களில் ஒருவரை அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக நியமிக்க முடியும் என்று தேர்தல் ஆணையகம் கூறுகிறது.

மார்ச் 13 ஆம் திகதி, பூரணைத் தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணையகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

பெண் மருத்துவர் மீதான அத்துமீறல் : ஊடகத்துறை அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

பெண் மருத்துவர் மீதான அத்துமீறல் : ஊடகத்துறை அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW