இலங்கைக்கான புதிய விமான சேவை ஆரம்பித்தது போலாந்து
இலங்கைக்கும் போலாந்துக்குமிடையிலான புதிய விமான சேவையொன்று போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் இனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - வார்சா இற்கிடையிலான இந்த புதிய விமான சேவையானது எதிர்வரும் 2025 மார்ச் மாதத்தின் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளின் பிணைப்பு
மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான பயண மற்றும் சுற்றுலா உறவினை பலப்படுத்தி முன்னேற்றும் நோக்குடன் இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் விமான சேவையானது நேற்று (30) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு வந்த பயணிகள் இலங்கை சுற்றுலாத்துறையின் தலைமையில் பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |