நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவிப்பு

Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province Political Development
By Rakshana MA Jul 14, 2025 12:05 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தனை, சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பிரதி அதிபர்கள் சந்தித்து கௌரவித்துள்ளனர்.

மேற்படி நிகழ்வில் தவிசாளர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை நலன் சார்ந்து விசேட கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பின் போது புதிதாக தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்தி வரவேற்ற பாடசாலைகளின் அதிபர்கள் பிரதி அதிபர்கள் அதனைத் தொடர்ந்து சபை ஊடாக பாடசாலைகளின் அபிவிருத்தி மேம்பாடு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து தவிசாளருடன் கலந்துரையாடினர்.

குறைந்தது மக்களின் சிரமம்: நடைமுறையாகும் புதிய திட்டம்

குறைந்தது மக்களின் சிரமம்: நடைமுறையாகும் புதிய திட்டம்

தவிசாளர் கௌரவிப்பு

அத்துடன், பிரதேச சபையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பிரதேச சபையினால் பாடசாலைக்கான வழமையான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் பாடசாலைகளின் முக்கிய தேவைகள் டெங்கு ஒழிப்பு திண்ம கழிவகற்றல் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவிப்பு | Navithanveli Chairman Honors Schools

மேலும் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் பதிலளிக்கையில், பிரதேச சபையினால் முடியுமான முக்கிய விடயங்களை பாடசாலை மாணவர்களின் அவசியம் கருதி நிறைவேற்றித்தர முயற்சிப்பதாகவும், அத்துடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தொடர்பில் பாடசாலை மட்டத்துடன் இணைந்து பணியாற்ற பாடசாலை நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், இவ்வாறான ஒத்துழைப்புக்கள் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமாக அமையும் என்றும் தவிசாளர் குறிப்பிட்டார்.

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

திருகோணமலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

திருகோணமலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery